"கூத்து பட்டறையில் இருக்கும்போதே.." விஜய் சேதுபதி குறித்து மனம் திறந்த நடிகர் விமல்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

விஜய் சேதுபதி நட்பு குறித்து விமல் பகிர்ந்த தகவல் - Actor Vemal about Vijay Sethupathi | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. கூத்துப்பட்டறை தொடங்கி குறும்படம் வரை பல முயற்சிகளை எடுத்து தமிழ் சினிமாவில் அதிரடியாய் அறிமுகமாகி பின் பல அட்டகாசமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.  ஒவ்வொரு படத்திற்கு தன்னை அதிகளவு ஈடுபடுத்தி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களை இன்று வரை கவர்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

அதன்படி தற்போது அவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் மெர்ரி கிறிஸ்தமஸ், பர்சி 2வது சீசன், மும்பைகார், ஜவான் ஆகிய படங்களிலும் மற்றும் காந்தி டாக்ஸ், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை 2 ஆகிய படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விமல் நடிப்பில் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார் இயக்கி குடும்பங்கள் குதூகலிக்கும் வகையில் நகைச்சுவை திரைப்படமாக உருவான ‘தெய்வ மச்சான்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து படத்தில் நடித்த விமல் மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய் சேதுபதியின் ஆரம்ப கால நட்புறவு குறித்து நடிகர் விமல் அவர்கள் பகிர்ந்து கொண்டவை,

"மனம் சோர்ந்து இருக்க நேரத்தில் தெம்பு கொடுக்குமளவு நிறைய வார்த்தைகள் சொல்வார். மனசுலருந்து பாராட்டுவார்.. யாரா இருந்தாலும் அவருக்கு பிடிச்சா அதை பாராட்டி பேசுவார். கூத்து பட்டறையில் இருக்கும் போதிலிருந்தே ஒரு விஷயம் பிடிச்சா பாராட்டி சொல்லிட்டே இருப்பார். என்னை மட்டும் இல்லை கூட இருக்கவங்களையும் ஊக்கப்படுத்தி பாராட்டிட்டே இருப்பார்." என்றார் நடிகர் விமல்

விஜய் சேதுபதி , விமல் இருவரும் கூத்து பட்டறையின் போதிலிருந்தே நல்ல நண்பர்கள், திரைத்துறையில் ஒரே நேரத்தில் வாய்புகள் தேடிய காலம் முதல் இன்று வரை நல்ல நட்பை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் முன்னதாக வெளியான டிஎஸ் பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விமல் நடித்திருப்பார். மேலும் குட்டிபுலி சரவணன் சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகவிருக்கும் ‘குலசாமி’ படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் அவர் நடித்து வெளியாகவிருக்கும் தெய்வ மச்சான் திரைப்படம் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்..-  உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்..- உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான அப்டேட் இதோ..

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை முடித்த எஸ் ஜே சூர்யா.. – படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..
சினிமா

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை முடித்த எஸ் ஜே சூர்யா.. – படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..

“காசு இல்லாம சொந்த வீட்டை வித்தோம்..” உண்மையை உடைக்கும் ராகவா லாரன்ஸ் – சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..
சினிமா

“காசு இல்லாம சொந்த வீட்டை வித்தோம்..” உண்மையை உடைக்கும் ராகவா லாரன்ஸ் – சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..