பிரபல நகைச்சுவை நடிகர் சென்ராயனுக்கு ஒரு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழில் வெளியான பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் திரைப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார்  நடிகர்  சென்ராயன். தொடர்ந்து மூடர்கூடம் ரௌத்திரம் மெட்ரோ என பல திரைப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனிக்கப்பட்டார். 

திரைப்படங்கள் மட்டுமல்லாது விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மேலும் சமீபத்தில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடிகர் சென்ராயன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில்  ஆஜித் மற்றும் கேப்ரியலா சில நாட்களுக்கு முன்பு  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

இந்த நிலையில் நடிகர் சென்ராயன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாகவும் மிகவும் கொடுமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் எண்ணுவது போல சாதாரணமாக இல்லை கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்றாயன் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்து உள்ளார். 

நடிகர் சென்ராயன் வீட்டிலேயே ஒரு தனி அறையில் தனிமைப்பட்டு இருப்பதாகவும் உணவுகளை நேரத்திற்கு மனைவி கொண்டு வந்து வெளியில் வைத்துவிட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.