நடிகர் சிலம்பரசன் எழுதி இயக்கிய வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான பிரேம்ஜி அமரன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தில் சீனு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிகர் சிலம்பரசன் இணைந்து உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. தமிழ் ராக்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி தீக்சித் கதாநாயகியாக நடிக்கிறார். 

தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தை ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி தயாரிக்க இயக்குனர் பரணி ஜெயபால் இயக்குகிறார். நடிகர் பிரேம்ஜி அமரன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க பிரேம்ஜி அமரனின் தந்தையான கங்கை அமரன் தமிழ்ராக்கஸ் திரைப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். 

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ்ராக்கஸ் படத்தின் டிரைலரை வருகிற ஜூலை 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.