“ஒருவர் படித்தால் அந்த தலைமுறையே நன்றாக இருக்கும்” கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகர் கார்த்தி – முழு வீடியோ உள்ளே..

அகரம் நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் கார்த்தி பேசிய வீடியோ வைரல்  - Actor karthi speech at agaram foundation event | Galatta

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சமூக செயல்பாடுகளை கல்வி சார்ந்து செய்து வருபது ‘அகரம் அறக்கட்டளை’. நடிகர் சூர்யா ஒருங்கிணைப்பில் தொடங்கிய அகரம் பல ஆண்டுகளாக பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களாலும் பல தன்னார்வலர்களாலும் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் இன்றும் பல கல்வி பயின்று வாழ்வியலை மாற்றியுள்ளனர். மேலும் நடிகர் சூர்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான சிவகுமார் கடந்து 44 ஆண்டுகளாக ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பெற்றோரை இழந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், அகரம் விருது விழா நிகழ்ச்சியும்  சென்னையில் இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி மற்றும் சூர்யா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை மற்றும் அகரம் விருது வழங்கினார்கள்.

நாம் தற்போது மிகவும் நல்ல காலக்கட்டத்தில் இருக்கிறோம். கல்வியின் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோரும் குழந்தைகளை படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அம்மா, அப்பா 50, 100 சம்பாதித்தாலும் எப்படியாவது தமது குழந்தைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். முன்பெல்லாம் அப்படி இல்லை. கல்வி முக்கியமா இல்லை. ஆரம்ப கட்ட கல்வி கணக்கு போட மட்டுமே சிலர் கற்று வந்தனர். எல்லோரும் பொறியியல், மருத்துவம் என்று படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய அப்பா ஓவியம் வரைகிறேன் என்றார். நமக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்தால்தான் நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதை அறிந்து கொண்டார்.

அதில் அப்பா பெரிய அளவு வந்தார். அதன் பின்னால் தான் அவருக்கு தெரிந்தது ஒருவன் படித்துவிட்டால் அவன் தலைமுறையே நன்றாக இருக்குமென்று.. அப்பாவை மாமாதான் படிக்க வைத்தார். ஒருவருக்கு கல்வியை கொடுத்தால் அது போதும். அதை விட பெரிய செல்வம் ஏதுமில்லை. கல்வி முக்கியத்துவம் னு அவரோட நூறாவது பட விழாவில் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டது தான் ‘ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளை’. இந்த அறக்கட்டளை மூலம் 44 வருடம் கல்வி சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே விருது வழங்கி கொடுத்து வந்தோம். பின் ஒரு மாணவன் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்து அந்த மாணவன் படிக்கிறான். எந்த நிலையில் இருந்து அவன் கல்வியை கைகொள்கிறான் என்பதை வைத்து விருது கொடுத்தோம்.  ஒரு டுயூஷன் போய் ஒரு மாணவன் மார்க் வாங்குறதுக்கும் எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டு மார்க் வாங்குறவனுக்கு வித்யாசம் இருக்கு.. அது சென்னையில் படிச்சு 100 மார்க் வாங்குறவங்களுக்கும் மலை வாழ் பகுதிகளில் படித்து 50 மார்க் வாங்குறவங்களுக்கும் வித்யாசம் இருக்கு., அவர்களை கண்டறிந்து விருது வழங்கினோம். இப்போது கவனத்தை சிதறடிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. முன்பு கவனம் சிதற சில விஷயங்கள் தான் இருந்தது. இன்று  அதையெல்லாம் மீறி இங்குள்ள மாணவர்கள் சாதித்து இருக்கிறார்கள்.” என்று பேசினார் நடிகர் கார்த்தி.

மேலும் நடிகர் கார்த்தி அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

 

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் தளபதி விஜய்.! கவனம் ஈர்க்கும் மக்கள் இயக்கத்தினரின் பயிலகம்..
சினிமா

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் தளபதி விஜய்.! கவனம் ஈர்க்கும் மக்கள் இயக்கத்தினரின் பயிலகம்..

காட்டு யானைகள் வாழ்வியலை பேசும் கதையில் ஆக்ஷன் ஹீரோவாக சண்முக பாண்டியன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..
சினிமா

காட்டு யானைகள் வாழ்வியலை பேசும் கதையில் ஆக்ஷன் ஹீரோவாக சண்முக பாண்டியன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

ஹீரோவாக எல்வின்.. சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்.. அட்டகாசமான  கூட்டணியில் உருவாகும் புதிய படம்  - டைட்டிலை வெளியிட்ட படக்குழு..
சினிமா

ஹீரோவாக எல்வின்.. சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்.. அட்டகாசமான கூட்டணியில் உருவாகும் புதிய படம் - டைட்டிலை வெளியிட்ட படக்குழு..