‘மாமன்னன்’ வெற்றியை தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முக்கிய திரைப்படம்.. அட்டகாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..

மாமன்னன் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் வைரல் பதிவு உள்ளே - keerthy Suresh next movie in tamil titled kanni vedi | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ், சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘குட் லக் சகி’, ‘சாணி காகிதம்’, ‘சர்காரு வாரி பட்டா’, ‘வாஷி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது, அதை தொடர்ந்து இந்த ஆண்டு இவரது நடிப்பில் முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் மற்றும் தசரா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. குறிப்பாக தமிழில் கீர்த்தி சுரேஷ் க்கு மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய ஆதரவை அளித்து ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல தொடக்கமாக தமிழ், தெலுங்கு திரையுலகில் அமைந்தது.

தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் போலா ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தமிழில், ராக்கெட் ரீட்டா, ரகு தாத்தா மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இதனிடையே தற்போது கீர்த்தி சுரேஷ் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘கண்ணிவெடி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து விஜே ரக்ஷன், நமீதா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படம் தொழில்நுட்பம் சார்ந்து சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் படக்குழுவினருடன் தொடங்கியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கலை இயக்குனர் சக்தி இயக்குனர் கலை இயக்கம் செய்கிறார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

Witness the enchanting Pooja ceremony of #Kannivedi. Get a glimpse of the magic that awaits! @KeerthyOfficial @aganeshraj @RakshanVJ @namikay1 @madheshmanickam@eforeditor @SaktheeArtDir #PCStunts @prabhu_sr #கண்ணிவெடி pic.twitter.com/jssEM2KilT

— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 15, 2023

முன்னதாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பர்ஹானா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ரசிகர்களின் பேராதரவோடு பர்ஹானா திரைப்படம் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக எல்வின்.. சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்.. அட்டகாசமான  கூட்டணியில் உருவாகும் புதிய படம்  - டைட்டிலை வெளியிட்ட படக்குழு..
சினிமா

ஹீரோவாக எல்வின்.. சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்.. அட்டகாசமான கூட்டணியில் உருவாகும் புதிய படம் - டைட்டிலை வெளியிட்ட படக்குழு..

“அற்புதமாக எழுதப்பட்ட திரைப்படம் இது..” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.!
சினிமா

“அற்புதமாக எழுதப்பட்ட திரைப்படம் இது..” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.!

“இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணனுமா னு யோசிச்சேன்.” மாவீரன் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகை சரிதா.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணனுமா னு யோசிச்சேன்.” மாவீரன் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகை சரிதா.. – Exclusive interview உள்ளே..