காட்டு யானைகள் வாழ்வியலை பேசும் கதையில் ஆக்ஷன் ஹீரோவாக சண்முக பாண்டியன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

சண்முக பாண்டியன் வித்யாசமான கதைக்களத்தில் புது பட அறிவிப்பு - Shanmuga pandian next film with elephant based story | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய காந்த். திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவனாக இருந்த இவர் அரசியலிலும் தனக்கான பாதையை சிறப்பாக வகுத்தவர். அரசியல் துறையிலும் திரைத்துறையிலும் என்றும் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரது மூத்த மகன் சண்முக பாண்டியன் திரைத்துறையில் கடந்த 2015 முதல் நடிகராக நடித்து வருகிறார். அதன் படி அவரது நடிப்பில் முன்னதாக வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

அதை தொடர்ந்து தற்போது நடிகர் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பூஜையில் சண்முக பாண்டியன் அவரது தாயார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.  Directors cinemas தயாரிப்பில் வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் U அன்பு இயக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார் ‘நட்பே துணை’ இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு.

இதுவரை கண்டிராத கதைக்களத்தில் வித்யாசமான ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கருவாக காட்டு யானைகளின் வாழ்வியல் அதன் பின்னணி என்று உருவாகவுள்ளது. புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடைபெறும் கதை என்பதால் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளா பகுதிகளில் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து ஒரிசா, தாய்லாந்து போன்ற பகுதிகளிலும் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் SR சதீஷ் குமார் ஒளிப்பதிவு இளையராஜா படத்தொகுப்பு செய்யவுள்ளார். மேலும் இப்படத்தின் டைட்டில் வரும் ஆடி 18ம் தேதி வெளியாகவுள்ளது.

 

raghava lawrence brother elvin new movie with diary director viral first look here

“இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணனுமா னு யோசிச்சேன்.” மாவீரன் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகை சரிதா.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணனுமா னு யோசிச்சேன்.” மாவீரன் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகை சரிதா.. – Exclusive interview உள்ளே..

“எனக்கே சில இடங்களில் Goosebumps வந்துச்சு..” ரசிகர்களுடன் மாவீரன் முதல் காட்சி பார்த்த சிவகார்த்திகேயன்..
சினிமா

“எனக்கே சில இடங்களில் Goosebumps வந்துச்சு..” ரசிகர்களுடன் மாவீரன் முதல் காட்சி பார்த்த சிவகார்த்திகேயன்..

பிரபலமான இந்திய திரைப்படங்களின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த வாரிசு , பொன்னியின் செல்வன் 2.. - பட்டியல் உள்ளே..
சினிமா

பிரபலமான இந்திய திரைப்படங்களின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த வாரிசு , பொன்னியின் செல்வன் 2.. - பட்டியல் உள்ளே..