மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் துல்கர் சல்மான் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளத்தில் வெளிவந்த செகண்ட் ஷோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து உஸ்டாட் ஹோட்டல், பெங்களூர் டேஸ், சார்லி, கலி, பறவா என பல சூப்பர் ஹிட் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான துல்கர் சல்மான் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக அவர் நடித்து வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மெகா ஹிட்டானது.

தற்போது இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் பால்கியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான PC.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாக உள்ள புதிய சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் துல்கர்  சல்மான் நடிக்க உள்ளார்.

இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் உள்ள பா, பேட்மேன் ,மிஷன் மங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி இயக்கிய ஷமிதாப் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய  நடிகராக துல்கர் சல்மான் இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் நடிக்க உள்ளது தமிழ் மற்றும் மலையாள திரை உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.