தமிழில்  ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவா இயக்கத்தில் உள்ளம் கேட்குமே திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகராக உயர்ந்தார்.தொடர்ந்து இவர் நடித்த சர்வம் மதராசபட்டினம் அவன் இவன் ராஜா ராணி  ஆரம்பம் மீகாமன் என அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

மௌனகுரு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் மகாமுனி.  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மகாமுனி விமர்சன ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா, புதிய திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் சாந்தகுமார் உடன் இணையவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு இயக்குனர் சாந்தகுமார் அளித்த பேட்டியில் புதிய திரைப்படம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். சார்பட்டா பரம்பரை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக நடிகர் ஆர்யா ,விஷால் உடன் இணைந்து ENEMY திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதைத்தொடர்ந்து அவர் இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளிவர உள்ள அரண்மனை 3 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.