மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் தற்போது கிளாப் என்ற படத்தில் நடித்துள்ளார். 

Actor Aadhi Gives A Haircut To His Father

சமீபத்தில் Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் உதவி இயக்குனர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கி உதவினார் ஆதி. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு முடி வெட்டுவது மற்றும் ஷேவிங் போன்ற விஷயங்கள் மிகப்பெரிய பிரச்சனையாய் மாறியுள்ளது. பலர் தாடி மீசையுடன் முனிவர் போல் காணப்படுகின்றனர். 

Actor Aadhi Gives A Haircut To His Father Actor Aadhi Gives A Haircut To His Father

இந்நிலையில் நடிகர் ஆதி தனது அப்பாவிற்கு வீட்டிலேயே முடிதிருத்தும் மற்றும் ஷேவிங் செய்து அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷேவிங் செய்த ஆதிக்கு அவரது தந்தை பணம் தருகிறார். அது மிகவும் குறைவான தொகை என்று கூறி அவர் பர்ஸில் இருந்து பணம் எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.