விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 3-ம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது முதல் வாரத்தை கலகலப்பாக கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே திடீரென வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து 2-வது வாரத்தின் முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் கேப்டன் தேர்வு மற்றும் நாமினேஷன் என ஆரம்பித்தது. பரபரப்பாக நடந்த கேப்டன் தேர்வுக்கான டாஸ்க்-ல் வெற்றி பெற்று பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.   

நாமினேஷன்-ல் தாமரைச்செல்வி மற்றும் பாவனியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ் மேட்களும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள். இவர்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறுபவர் யாரென்பது மக்கள் கையில் உள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின. 

முன்னதாக அபிஷேக் மற்ற போட்டியாளர்களை விமர்சனம் செய்வதும், நாதியா சாங்-ஐ  இந்த சீசனின் வனிதா என குறிப்பிடும் ப்ரோமோ வெளிவந்தது. தொடரந்து சற்று முன் வெளிவந்த ப்ரோமோவில் அபிஷேக் வீட்டிலுள்ள ஹவுஸ்மேட்களுக்கு அடைமொழி வைக்கிறார். “அசால்ட் அக்ஷரா”, “வவ்வால் வருண்”, “நெருப்பு நிரூப்”, “இம்சை இசை” என ஒவ்வொருவருக்கும் அடைமொழி வைக்கும் கலகலப்பான ப்ரோமோ வீடியோ இதோ…