விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிரம்மாண்டமாக தொடங்கியது. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

கேப்டன்கள் தேர்வு , கலகலப்பான கதைகள் என முதல் நாள் நகர, 2-வது நாளில் கடந்து வந்த பாதை சுற்று தொடங்கியது. இசைவாணி மற்றும் சின்னப்பொண்ணுவின் கடந்து வந்த பாதை போட்டியாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்த, அடுத்த நாளில் பேசிய இமான் அண்ணாச்சியின் கடந்து வந்த பாதை மகிழ்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து பேசிய சுருதியின் கடந்து வந்த பாதையும் உருக்கம் நிறைந்ததாக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் 3 புதிய ப்ரோமோ வீடியோக்கள் வெளியானது. முதல் ப்ரோமோவில் நமீதா தனது வாழ்வின் மிக கடினமான கொடுமைகள் நிறைந்த கடந்து வந்த பாதையை கண்ணீரோடு பகிர ஒட்டு மொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் கண்கலங்கினர்.

அடுத்த ப்ரோமோவில் பாவனி, மறைந்த கணவர் குறித்து எமோஷ்னலாக இருக்க, பிரியங்கா அவரை கலகலப்பாக்கும் அழகிய நிகழ்வும் நடந்தது. அந்தவகையில் சற்றுமுன் வெளியான புதிய ப்ரோமோவில் பிரியங்கா , அபிஷேக்கை குற்றம்சாட்ட,“குறும் படம் போடுங்க பிக் பாஸ்” என அபிஷேக் ராஜா கேட்கும் ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்தப் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.