கல்யாண வீட்டில் “மாப்ள, பொண்ணு யாருனு கண்டுப்பிடிங்க” என்று, மாப்பிள்ளையின் கண்ணை கட்டி ஆடிய விளையாட்டு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற கல்யாண வீட்டில் தான் இப்படி ஒரு கலகலப்பான விளையாட்டு நடந்து தற்போது வைரலாகிக்கொண்டு இருக்கிறது.

கல்யாண வீடு என்றால், கலை கட்டுவது வழக்கம். அதுவும், சாஸ்திர சம்பிரதாய முறைப்படி நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும் பேசும் படியாகவே அமைந்து விடும். அதில், கல்யாண வீட்டில் பொண்ணு - மாப்பிள்ளையைத் தாண்டி, சில இளசுகள் தங்களுக்கான ஜோடிகளை ஒரு பக்கம் தேடிக்கொண்டு இருக்கும்.

தற்போது உள்ள கல்யாண வீடுகளில் மணமக்களின் நண்பர்கள் நடனமாடி, பொண்ணு - மாப்பிள்ளையையும் மேடையிலேயே நடனமாடச் செய்து வருகின்றனர்.

அதிலும் முக்கியமாக, வீட்டில் உள்ள சில குட்டி சுட்டிகள், பொண்ணு - மாப்பிள்ளையை வைத்தே கேம் விளையாடி, அனைவரின் கவனத்தையும் திருப்பிவிடுவது என்பது எப்போதாவது நிகழும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. அப்படியான ஒரு சுவாராஸ்சிய நிகழ்வுதான், நம்ம தமிழ்நாட்டில் தற்போது அரங்கேறி இருக்கிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது ஒரு கல்யாண வீடியோ ஒன்று மிகவும் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது. 

“திருமணம் என்றால், இப்படி சந்தோஷமான தருணங்களை அனுபவிக்க வேண்டும்” என்று, பலரையும் நினைக்க வைக்கும் அளவுக்கு இந்த வீடியோ சமகால உதாரணமாக அமைந்து உள்ளது.

கல்யாண மாப்பிள்ளையின் கண்ணைத் துணியால் கட்டி வைத்து, ஒவ்வொருவராக வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்க்கிறார்கள். அப்போது, அந்த கல்யாண மாப்பிள்ளை, 'யார் கல்யாண பெண்?' என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது தான், விளையாட்டு.

அதன் படி, அந்த வீடியோவில், “கல்யாண மாப்பிள்ளையின் கண்ணைத் துணியால் கட்டி வைத்து உள்ளார்கள். அந்த மாப்பிள்ளை அமர்ந்திருக்கிறார். ஆனால், அவரை சுற்றி அவரது நெருங்கிய உறவினர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சூழ்ந்து நிற்க, ஆண் - பெண் என ஒவ்வொருவராக வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்க்கிறார்கள். 

இப்படியாக, பலரும் வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்த்த நிலையில், இறுதியாகக் கல்யாண பெண் வந்து, மாப்பிள்ளையின் கையை பிடித்த நிலையில், வெட்கத்தில் சிவந்து நிற்க, அப்போது மணப்பெண்ணின் கையை தடவிப் பார்த்து, ஒரு வழியாகக் கல்யாண பெண்ணை, அந்த மாப்பிள்ளையும் கண்டுபிடித்து விடுகிறார். இதனால், சுற்றி நின்றிருந்த ஒட்டுமொத்த உறவுகளும் “ஏய்...” என்று ஆர்ப்பரித்து சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள்.

இந்த கல்யாண விளையாட்டு வீடியோவானது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், இதனை தங்களது இணையப் பக்கங்களில் பகிர்ந்து வண்ணம் உள்ளனர்.