திருப்பூர் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், இரு குழந்தைகளின் தந்தை தனிமையில் வாடி வதங்கிய நிலையில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ள ராவனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் என்ற இளைஞருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்து உள்ளன. 

இப்படி மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு, அவரது மனைவி சந்தோஷ் குமாரை பிரிந்து தனது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார். இதனால், மனைவியை பிரிந்து தனிமையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சந்தோஷ் குமார், தனிமையில் ஏங்கித் தவித்து வந்து உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சந்தோஷ் குமாரின் வீட்டின் அருகே வசித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தோழி உடன் ஊர்க்கு ஒதுக்குப்புறத்திற்குச் சென்று உள்ளார். அப்போது, அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற சந்தோஷ் குமார், அந்த 13 வயது சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அந்த சிறுமியின் ஆடையை கிழித்து உள்ளதாகத் தெரிகிறது. இதனால், பயந்து போய் கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது, பொது மக்கள் ஓடி வருவதைக் கூட கவனிக்காத அவன், சிறுமியை பலவந்தமாகப் பலாத்காரம் செய்வதிலேயே குறியாக இருந்து உள்ளான். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள், சந்தோஷ் குமாரைப் பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து உள்ளனர்.

இதனையடுத்து, அங்குள்ள குடிமங்களம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் சந்தோஷ் குமாரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குடிமங்கலம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்த செங்கோடன், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு உள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்த செங்கோடன், அந்த இளம் பெண்ணைப் பாலியல் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், சத்தம் போட்டுக் கத்தி உள்ளார். இளம் பெண்ணின் கூச்சல் போடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உள்ளனர். அப்போது, பொது மக்கள் ஓடி வருவதைப் பார்த்த செங்கோடன், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.

இதனையடுத்து, பாலியல் பலாத்கார மோதலில் படுகாயம் அடைந்த அந்த இளம் பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார்,  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.