மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் காட்டிய 47 வயது முதியவர் ஒருவர், தொடர்ந்து 5 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான கண்ணன், விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தனது உறவினரின் மகளான 15 வயது சிறுமியிடம், அவர் வீட்டிற்கேச் சென்று ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, திருமண ஆசைகள் காட்டி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியை தொடர்ந்து தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கசிக்கிப் பிழிந்து உள்ளார்.

ஒரு கட்டத்தில், பாலியல் பலாத்காரம் எல்லை மீறிப் போகவே, அந்த வலியைத் தாங்க முடியாமல், அந்த சிறுமி முரண்டுப் பிடித்து உள்ளார். அப்போது, “எனது ஆசைக்கு இணங்க வில்லை என்றால், உன்னையும், உனது தந்தையைக் கொன்று விடுவேன்” என்று, கண்ணன் கடுமையாக மிரட்டி உள்ளார்.

மேலும், “இது பற்றி வெளியே சொன்னால், உன்னை அசிங்கப்படுத்தி, கொலை செய்து விடுவேன்” என்று, தொடர்ந்து மிரட்டி, அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து செய்து வந்துள்ளார்.

தொடர் பாலியல் பலாத்காரத்தால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார். குறிப்பாக, அந்த 15 வயது சிறுமியின் கரு 5 மாத கருவாக வளர்ந்து உள்ளது. இதனால், சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனைக் கவனித்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, தனக்கு கடந்த 5 மாதங்களாக நடக்கும் பாலியல் பாலாத்கார அத்து மீறல்கள் குறித்து, அந்த சிறுமி அழுதுகொண்டே எல்லாவற்றையும் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர், கண்ணனை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

அதே போல், மயிலாடுதுறையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி 9 ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

மயிலாடுதுறையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, அவரது உறவினரான மயிலாடுதுறை செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த 21 வயதான சங்கர், கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளார். இது தெரியாமல், சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். ஆனால், சிறுமி கிடைக்காத நிலையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். அப்போது, சிறுமியை அவரது உறவினர் சங்கர் என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை தேடிப் பிடித்து போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

மேலும், சங்கரிடமிருந்து கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.