சட்டீஸ்கர் மாநிலத்தில், 14 சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ய முயன்றபோது, ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை 2 பேர் சேர்ந்து எரித்துக்கொன்ற சம்பவம், நெஞ்சை உரைய வைத்துள்ளது. 

“காமம், எதையும் செய்யத் தூண்டும். எதையும் செய்ய வைக்கும்” என்பதற்கு சட்டீஸ்கர் மாநிலத்தில் 14 வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடூர சம்பவமே சாட்சி கூறுகிறது.

சட்டீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்து வந்தார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விடவே, அந்த பகுதியில் உள்ள தனது சக தோழிகள் வீடுகளுக்குச் சென்று, அந்த சிறமி விளையாடி வீடு திரும்பவது வழக்கம்.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான 22 வயது இளைஞர் ஒருவரும், 13 வயது சிறுவன் ஒருவனும் சிறுமி வரும் போதும், போகும் போதும் அவரை சீண்டுவது வழக்கம். 

எனினும், அவர்கள் தெரிந்தவர்கள் என்பதால், விளையாடுகிறார்கள் என்று, அந்த சிறுமி எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமி மீது அந்த 2 பேரும் காம வயப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த 22 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை, சிறுமி வீட்டின் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது காம வயப்பட்ட இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு, சிறுமியிடம் பேச்சு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, இருவரும் மாறி மாறி சிறுமியின் வீட்டுக்கு அருகிலேயே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால், அந்த காமூகர்கள் இருவரின் ஆசைக்கு இணங்க சிறுமி மறுத்ததுடன், ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த 2 பேரும், சிறுமியின் மீது மண்ணெண்னையை ஊற்றி தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இதில், தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர்.

இதனையடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர். அங்கு 95 சதவீதம் தீ காயங்களுடன் சிறுமிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

வாக்கு மூலத்தில், “என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, மண்ணெண்னையை ஊற்றி தீயிட்டு கொழுத்திய இருவரும், ஏற்கனவே எனக்கு நன்க அறிமுகம் ஆனவர்கள் தான்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி அளித்த வாக்கு மூலத்தை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 குற்ற வாளிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், தலைமறைவான இருவரில் ஒருவரை போலீசார் தற்பொது கைது செய்துள்ளனர். அவர் மீது  கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில், அவரை மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீயிட்டு எரிந்து கொன்ற வழக்கில், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இதனிடையே, 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, 2 பேரால் தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.