ஊரடங்குக்குப் பிறகு, பள்ளிகளை 6 கட்டங்களாகத் திறக்கலாம் என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் ஆள் பாஸ் செய்யப்பட்டுள்ளனர்.

Schools to reopen in 6 phases after lockdown

எனினும், ஆண்டு தோறும் கோடை விடுமுறைகளுக்குப் பிறகு ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த அண்டு கொரோனா தொற்று பெரிய அளவில் பரவி வருவதால், பள்ளிகள் திறப்பது ஆகஸ்ட் மாதங்களுக்குத் தள்ளிப் போகலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலிடம் பள்ளிகள் திறப்பு, அதன்பிறகு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டிருந்தது. 

இது குறித்து ஆலோசித்த அந்த கவுன்சில், மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்து இருப்பதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்தியாவில் ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகளை 6 கட்டங்களாகத் திறக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

2 ஆம் கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கிய ஒரு வாரத்துக்குப் பிறகு, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

3 வது கட்டமாக  9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட பிறகு, 2 வாரங்களுக்குப் பின் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும், அதனைத் 

Schools to reopen in 6 phases after lockdown

தொடர்ந்து 3 வாரங்களுக்குப் பிறகு 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கும், அதிலிருந்து ஒரு மாதத்துக்குப் பின் 1 மற்றும் 2 ம் வகுப்புகளுக்கும், அதிலிருந்து 5 வாரங்களுக்குப் பிறகு நர்சரி வகுப்புகளுக்கும் தொடங்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகள் திறந்த பிறகு, ஒரு வகுப்பறையில் 30 முதல் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து வகுப்பறையிலும், ஒருவருக்கொருவர் இடையில் 6 அடி தூரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக, வகுப்பறைகளில் ஏ.சி. இருக்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாகக் கதவுகளும், ஜன்னல்களும் திறந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒரு மாணவர் பயன்படுத்தும் மேஜை மற்றும் அவர்கள் அமரும் இருக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கவேண்டும் என்றும், அதில் மற்றவர்கள் அமரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளியில் நடைபெறும் காலை இறைவணக்கத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும், பள்ளிக்கு வெளியே உணவு நிலையங்கள் இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அனைத்து மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், மாணவர்கள் தங்களுக்குள் உணவு, குடிநீர் பகிர்ந்து கொள்வதை அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளியில் திறந்தவெளியில் வகுப்புகளை நடத்துவது மிகவும் சரியாக இருக்கும் என்றும், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.