16 வயது சிறுமியை மகனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டு, மாமனாரே கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த சிறுமியை மொத்தம் 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் அதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் இப்படி கொடூரமான சம்பவம் அரங்கேறி தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

தற்போது, கொரோனா காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், அந்த சிறுமி தனது பெற்றோருடன் தங்கி வந்த நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக, அவரது பெற்றோருக்கும் குடும்ப செலவுக்கு மிகவும் சிரமப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் தான், அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவர், இந்த 16 வயது சிறுமியைக் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு, அந்த சிறுமி கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், அந்த சிறுமியை, அந்த சிறுமியின் கணவன் வலுக்கட்டாயமாகப் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த சிறுமியின் மாமனார், தனது மருமகள் என்றும் பார்க்காமல், 16 வயதே ஆன சிறுமி என்றும் பார்க்காமல், அவர் மீது சபலப்பட்டு அவரை மிரட்டி மிரட்டித் தொடர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், அந்த மாமனாருக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் என மொத்தம் 8 பேர், அந்த 16 வயது சிறுமியை மிரட்டியே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

இதனால், மிரண்டுபோன அந்த சிறுமி, உயிர் பிழைத்தால் போதும் என்கிற மன நிலையில், எல்லா கொடுமைகளையும் தாங்கிக்கொண்டும், சகித்துக்கொண்டும் இருந்து உள்ளார்.

அதே நேரத்தில், அந்த சிறுமி கடந்த 8 மாத காலத்திற்கும் மேலாக 8 பேரால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து, தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

இதனால், வேறு வழியில்லாமல் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி, மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், திடீரென்று அவரது கணவன் மற்றும் மாமனாரின் பார்வையிலிருந்து தப்பிய அந்த சிறுமி, தனக்குக் கடந்த 9 மாதங்களாக நேரும் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்தும், தன்னை 8 பேர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் குறித்து, இதற்கெல்லாம் மூலகாரணாக இருந்த தன்னுடைய மாமனார் குறித்தும் அப்படியே புகார் கூறி கண்ணீர் வடித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கணவர் சரண்ராஜ், மாமனார் யோகிதாஸ் உள்பட 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய அவர்கள் வீட்டிற்கு சென்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். 
இதனால், தலைமறைவாக உள்ள அந்த 8 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில், 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் சிறுமியை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக போலீசார் அனுமதித்து உள்ளனர். இச்சம்பவம், பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.