சென்னை திருமணமான இளைஞர் ஒருவர், திருமணம் ஆகாத இளம் பெண்ணை துரத்தி துரத்தி காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய நிலையில், அந்த பெண்ணுக்கு இன்று குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 24 வயதான லோகேஷ் என்ற இளைஞருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணமான நிலையில் மனைவி மற்றும் குழந்தை உள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு அதாவது மிகச் சரியாக 10 மாதங்களுக்கு முன்பு, வேலை நிமித்தமாக மதுரவாயல் வழியாக லோகேஷ் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகி உள்ளது. கடும் வெயிலின் தாக்கத்தில் பஞ்சர் ஆன இருசக்கர வாகனத்துடன் வெகு நேரம் அவர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டில் அவர் குடிக்கத் தண்ணீர் கேட்டு உள்ளார். 

அப்போது, அங்கிருந்து ஒரு அழகான இளம் பெண், குடிக்கத் தண்ணீர் கொடுத்து உள்ளார். தண்ணீரை வாங்கும் போதே, அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கிய லோகேஷ், தன்னுடைய போன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று உள்ளார். போன் நம்பரைப் பார்த்து, அந்த பெண் எப்படியும் கூப்பிடுவாள் என்று, ஒரு வார காலம் லோகேஷ் காத்திருந்து உள்ளார். ஆனால், அந்த இளம் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இதனால், ஏங்கித் தவித்த லோகேஷ், ஒரு வாரம் கடந்த நிலையில், மீண்டும் அந்த இளம் பெண் வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்பது போல், அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி இறைத்துள்ளார்.

“காதலிப்பதாகவும், நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்றும், மனக்க மனக்க காதல் பேசி அந்த பெண்ணை கவர்ந்துள்ளார். ஆனால், அப்போதும் அந்த பெண் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை சில நாட்கள் பின் தொடர்ந்த லோகேஷ், துரத்தி துரத்தி அந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன் காதல் வலையில் அந்த பெண்ணை வீழ்த்தி உள்ளார் லோகேஷ்.

அதன் பிறகு, இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில், அந்த இளம் பெண்ணை பல இடங்களுக்கு லோகேஷ் அழைத்துச் சென்று ஊர் சுற்றி, காதலை வளர்த்து வந்துள்ளார்.

அதன்படியே, அந்த பெண்ணை திட்டம் போட்டு தனியாக அழைத்துச் சென்று, உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அந்த இளம் பெண் கருவுற்றுள்ளார்.

தான் கருவுற்றுள்ளது உள்ளது குறித்து, அந்த இளம் பெண் காதலனிடம் கூறியுள்ளார். ஆனால், கர்ப்பத்தைக் கலைத்துவிடுமாறு லோகேஷ் வற்புறுத்தி உள்ளார்.
ஆனால், அதற்கு மனசு இல்லாத அந்த இளம் பெண், கர்ப்பத்தைக் கலைக்காமல் இருந்துள்ளார்.

இதனால், அவர் உடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இது குறித்து, அந்த இளம் பெண்ணின் பெற்றோர் கேட்டபோது, “எனக்கு வயிற்றில் நீர் கட்டி இருக்கிறது” என்று கூறி உள்ளார். இதனால், அது தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில், நேற்று அந்த பெண்ணிற்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண்ணின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு 

மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், “உங்கள் பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாகவும், சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும்” என்றும் கூறி உள்ளனர். இதனைக் கேட்ட அந்த பெண்ணின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

அதன் படி, அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தது குறித்துப் பெற்றோர் மகிழ்ச்சி அடையாமல் கடும் அதிர்ச்சி அடைந்ததால் மருத்துவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். அப்போது, இது தொடர்பாக மருத்துவர்கள் கேட்ட போதுதான், அந்த இளம் பெண்ணிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரிய வந்தது. இதனால், மருத்துவமனை சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மதுரவாயல் போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்கு சென்று அந்த இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான், இவ்வளவு உண்மையும் தெரிய வந்தது.