மதுரை அருகே 12 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்ற காதலன், தன் நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில், இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படும் நிலையில், வட மாநிலங்களைப் போன்றே தமிழகத்திலும் தற்போது பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.

அதாவது, மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் கோகுல் ராஜ் என்ற இளைஞர், அங்குள்ள சோழவந்தானில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி உள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வந்த சமயத்தில், அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று, அந்த மாணவியைத் தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளதாகத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில், அந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை எப்படியோ தனது காதல் வலையில் வீழ்த்திய கோகுல் ராஜ், செல்போனில் தனது காதலை வளர்த்து வந்ததாகத் தெரிகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி வீட்டில் தனது பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த சிறுமியின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியை எப்படியோ வீட்டை விட்டு வெளியே வர வைத்து உள்ளார்.

இப்படியாக, அந்த சிறுமியும், காதலன் கோகுல் ராஜை நம்பி, தனது பெற்றோரை மறந்து காதல் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

அதன் படி, அந்த பள்ளி மாணவியை, தனது உறவினர் வீட்டுக்கு கடத்திச் சென்ற காதலன் கோகுல் ராஜ், தனது நண்பன் சபரியுடன் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இதற்கு சம்மதிக்காமல் காதலன் கோகுல் ராஜிடமும், அவனது நண்பன் சபரியிடமும் சண்டை போட்டு உள்ளார். இதனால், அந்த சிறுமிக்கு அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பதறிப்போன அந்த மாணவி சத்தம் போட்டு கத்தி உள்ளார். இதனையடுத்து, அந்த மாணவி எப்படியோ அங்கிருந்து தப்பிய நிலையில், தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதனால், பதறிப்போன மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன் படி, 23 வயதான கோகுல் ராஜ் மற்றும் அவரது நண்பரான 23 வயதான சபரி ஆகிய இருவரையும், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர்கள் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப் படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, 12 ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்ற காதலன், தன் நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், மதுரை அருகே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.