காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் தீம் பாடல் மற்றும் ரொமான்டிக் பாடல் அதோடு ஒரு குத்து பாடல் என்று மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது.

கொரோனா காரணமாக இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியிட படக்குழு முதலில் திட்டமிட்டு தேதி அறிவித்திருந்தனர்  திட்டமிட்டிருந்தனர்,ஆனால் விமானப் படையிடம் இருந்து NOC கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தீபாவளியை ஒட்டி நவம்பர் 12ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

OTT-யில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.மேலும் இந்த படத்தை பல மொழிகளை சேர்ந்த நடிகர்களும் பாராட்டி வருகின்றனர்.ரசிகர்கள் சிலர் இந்த படத்தை திரையரங்குகளில் காணமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்கள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காட்டுப்பயலே பாடலின் வீடியோ தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.