ஃபேஸ்புக் மூலம் 15 வயது சிறுமியிடம் பழகிய 27 வயது இளைஞன், ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், மாணவ - மாணவிகள் பலரும் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயின்று வருகின்றனர். அப்படி படிக்கும் மாணவர்கள் சிலர், அதைத் தவறான வழியில் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அப்படியான ஒரு பிரச்சனை தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது.

அதாவது பள்ளியில் படித்து வந்த குறிப்பிட்ட 15 வயது சிறுமி, ஆன்லைன் வகுப்பிறாக்காக பெற்றோர்கள் தாங்கித் தந்த செல்போனில் புதிதாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி, அதில் எந்நேரமும் அவர் மூழ்கி கிடந்து உள்ளார். 

அப்போது, இந்த 15 வயது சிறுமிக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது சிரஞ்சீவி என்ற இளைஞருக்கும் அறிமுகம் ஆகி உள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி சாட்டிங் செய்து, தங்களது பழக்கத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளனர். 

அத்துடன்,. இருவரும் பேஸ்புக்கில் அதிக நேரம் பேசி நண்பர்கள் ஆன நிலையில், இவரும் தங்களது செல்போன் எண்களையும் பரிமாறிக்கொண்டதாகத் தெரிகிறது. 

இப்படியாக இவர்கள் முகம் பார்க்காமல் பழகி வந்த நிலையில், அந்த 27 வயது இளைஞன், அந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறியுள்ளான். 

மேலும், “சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். இதை நம்பி அந்த சிறுமி, இளைஞர் வீசிய காதல் வலையில் சிக்கி உள்ளார். 

இதனையடுத்து, சிறுமியை சந்திக்க அந்த இளைஞர் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். அங்கு, சிறுமியை தனியாக வரவழைத்து, ஏற்கனவே திட்டமிட்டது 
போலவே, சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இப்படிப்பட்ட சூழலில், சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. 

இதனால், சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் அங்குள்ள நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியின் செல்போண் நம்பரை டிராக் செய்து பார்த்து உள்ளனர். அப்போது, சிறுமி இருக்கும் இடம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 27 வயது சிரஞ்சீவி உடன் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

மேலும், 27 வயது சிரஞ்சீவியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, சிறுமியை மீட்ட போலீசார், சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, 27 வயது இளைஞன் சிரஞ்சீவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், ஃபேஸ்புக் மூலம் 15 வயது சிறுமியிடம் பழகியதும், அதன் தொடர்ச்சியாக, ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, 

சிரஞ்சீவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம்,  அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.