ஒரே நேரத்தில் தாயும், மகளும் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்த நிலையில், கணவனின் எச்சரிக்கையையும் மீறி கைவிட மறுத்த மாமியாரை மருமகன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்து உள்ள மூலைக்கரைப்பட்டி பொட்டல் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர், தனது மனைவி 45 வயதான ராஜலட்சுமி உடன் வசித்து வந்தார். 

ராஜலட்சுமி, நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த வேலாயுதம் - ராஜலட்சுமி தம்பதிகளுக்கு 23 வயதில் அனிதா என்ற மகள் இருந்தார்.

மகள் அனிதாவுக்கு, அபிமன்யு என்ற இளைஞருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.  33 வயதாகவும் அபிமன்யு -  23 வயதில் அனிதா தம்பதிக்கு தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தற்போது மூலைக்கரைப்பட்டி அடுத்த கல்லத்தியில் வசித்து வந்தனர்.

குறிப்பாக, அனிதாவுக்கு திருமணத்திற்கு முன்பே, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் இருந்து வந்திருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதால், பல இடங்களுக்குத் தனிமையாகச் சென்று, தங்களது காதலை வளர்த்து வந்தனர். அத்துடன், இந்த காதலர்கள் அதிகம் தனிமையில் சந்தித்துக்கொண்டு, மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மகள் அனிதாவின் காதல் விசயம் தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்த அனிதாவின் பெற்றோர், மகளின் காதல் கதையை மறைத்து தங்களது உறவினரான அபிமன்யுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

ஆனால், அனிதாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும், தனது பழைய காதலானை மறக்காமல், தன்னுடைய காதல், தற்போது கள்ளக் காதலாகத் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து உள்ளார். இதனால், அந்த பழைய காதலன் உடன் அனிதா அடிக்கடி சென்று தனியாகச் சந்தித்துப் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

மனைவியின் இந்த கள்ளக் காதல் விசயம், கணவன் அபிமன்யுக்கு தெரிந்த நிலையில், அவர் தனது மனைவியை கண்டித்து உள்ளார். இதனால், கணவனிடம் சண்டைபோட்ட அனிதா, தனது இரு குழந்தைகளையும் கணவனிடம் விட்டு விட்டு, தனது அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதே நேரத்தில், அனிதாவின் தாயான செவிலியராக பணியாற்றும் ராஜலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவருடன் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. 

இந்த விசயம், அவரது கணவர் வேலாயுதத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் வேலாயுதம், 45 வயதான தனது மனைவி ராஜலட்சுமியை கண்டித்து உள்ளார். ஆனால், கணவனின் எச்சரிக்கையும் மீறி, அவர் தனது கள்ளக் காதலைத் தொடர்ந்து உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த வாரம் மூலைக்கரைப்பட்டி சென்ற அபிமன்யு, தனது மனைவியை குடும்ப நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுக்கவே, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாமியார் ராஜலட்சுமி மருமகன் அபிமன்யுவை தாக்கி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மருமகன் அபிமன்யு, இது தொடர்பாக கடந்த 15 ஆம் தேதி அங்குள்ள நாங்கநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில், “என் மனைவியை என்னுடன் குடும்பம் நடத்த வர மறுப்பதாகவும், எனது மாமியாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்” அவர் புகார் அளித்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் நேற்று இரவு 9 மணிக்கு மூலைக்கப்பட்டிக்கு சென்ற கணவன் அபிமன்யு, தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்து உள்ளார். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது, கடும் கோபம் அடைந்த அபிமன்யு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மாமியார் ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டி உள்ளார். அப்போது, மாமனார் வேலாயுதமும் அவரை வெட்டி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வேலாயுதம் மற்றும் அபிமன்யு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.