தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான் குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும்  ஊரடங்கு விதிமுறைகளை மீறி தங்களின் கடையைத் திறந்து வைத்திருந்த காரணத்துக்காக, கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில்  சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 10 காவலர்களை  சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து, அவர்களை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். 

பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிலிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்டின் ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான ஏழு பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் சாத்தான்குளத்தில் விசாரணையைத் நடத்தினர்.
 
தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள், ஏட்டு முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி வரை அனைவருமே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்துதான், முன்னதாக விசாரணையை கையாண்ட CBCID, 10 போலீஸ்காரர்கள் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.  உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை கான்ஸ்டபிள் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரை கைது செய்தது. பின்னர் தமிழக அரசு விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனமான CBI-க்கு மாற்றியது. CBI, போலீஸ் காவலில் மரணம் என்றிருந்த FIR-ஐ மரண வழக்காக மாற்றியது.

இதற்கிடையில் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சுக்லா தலைமையில், அதிகாரிகள் அனுராக் சிங், பவன்குமாா் திவேதி, சைலேஷ்குமாா், சுஷில்குமாா் வா்மா, அஜய்குமாா், சச்சின், பூனம் குமாா்ஆகியோா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், ஜூலை 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் தலா 2 போ் என 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள், மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள சிபிஐ அதிகாரிகளில் மேலும் ஒருவருக்கு, கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரும் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். புது தில்லியில் இருந்து சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரிக்க வந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 5 போ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது.

எதிர்கட்சி தரப்பில் விசாரனை தொடர்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. வீரியத்தை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், `எங்களுக்கு வேலையோ பணமோ வேண்டாம், நீதி வேண்டும்' என்றும் கூறியிருந்தார் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி.

தந்தை மகன் மரண வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கொடுத்திருக்கிறார். தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் அவர்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களிடம் பேசிய போது, ``வேலை கொடுத்த அரசுக்கு நன்றி, இருவரை இழந்து வேதனையில் இருக்கும் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்துள்ளது. இருவரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.

 

- பெ.மதலை ஆரோன்