கூட பிறந்த சகோதரியையே கடந்த 20 ஆண்டுகளாக சொந்த தம்பியே, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள், இந்த முறை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் அரங்கேறி இருக்கிறது.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், அவரது குடும்பத்தால் முறைப்படி திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

அவரது திருமண வாழ்க்கை சில காலம் நன்றாகச் சென்ற நிலையில், அதன் பின்னர் கணவன் - மனைவிக்கு இடையே வழக்கமாக நடைபெறும் சண்டை வந்து, கால போக்கில் பெரிய சண்டையாக மாறி உள்ளது. 

இதனால், கணவன் - மனைக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக தனது கணவரிடமிருந்து பிரிந்து, தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனது அம்மா வீட்டிலேயே அந்த பெண் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அந்த வீட்டில் 40 வயதான அந்த பெண்ணின் இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். 40 வயதான அந்த சகோதரருக்கு இது வரை திருமணம் ஆகவில்லை. 

இந்த சூழலில் தான், அந்த சகோதரர், தனது சொந்த அக்கா மீதே சபலப்பட்டு, தொடக்கத்தில் தனது அக்காவிடமே பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து வெளியே சொல்ல முடியாமல் தவிக்கவே, இதனையே தனக்கு சாதகமான சூழலாகப் பயன்படுத்திக்கொண்டு தனது அக்காவை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும், அதன் தொடர்ச்சியாக, தற்போது வரை 20 ஆண்டுகளாகத் தனது சொந்த அக்காவை, கூட பிறந்த தம்பியே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

எனினும், இத்தனை ஆண்டுகளாக இதை வெளியே சொன்னால், தனது குடும்ப மானம் போகும் என்று, புலம்பி பொறுமையாக இருந்து வந்த அந்த பெண், ஒரு கட்டத்தில் தம்பியின் பாலியல் தொல்லைகள் அனைத்தும் எல்லை மீறி போகவே, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், அந்த பெண்ணின் இளைய சகோதரனை அதிரடியாகக் கைது செய்து, தீவிர விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, தன் உடன் பிறந்த சொந்த அக்காவை, 20 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தம்பியின் செயலானது,  மயிலாப்பூர் பகுதி வாழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.