காதலன் கண் முன்னே கல்லூரி மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் தான் இப்படி ஒரு கொடூரமான வன்கொடுமை சம்பவம் அரங்கேறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், இளங்கலை பட்டம் படித்து வருகிறார். 

அந்த இளம் பெண், ஒரு இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இதனால், காதலர்கள் இருவரம் அடிக்கடி வெளியே சென்று வருவது அடிக்கடி நடந்திருக்கிறது.

அதன் படி, நேற்று முன் தினம் மாலை அந்த இளம் பெண்ணும், அவருடைய காதலனும் காரில் மைசூரில் உள்ள சாமுண்டி மலை அடிவாரத்திற்குச் சென்று உள்ளனர்.

பின்னர், அந்த மலை அடிவாரத்தில் உள்ள லலிதா திரிபுர பகுதிக்குச் சென்ற இந்த காதலர்கள், தங்களது காரை அங்கேயே நிறுத்திவிட்டு, இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் பேரும் வெகு நேரமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அந்த சமையத்தில், காதலர்கள் இருவரும் தனியாக காரில் வருவதையும், காரை நிறுத்திவிட்டுப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்த அந்த பகுதியைச் சேர்ந்த 6 பேர், திடீரென்று அங்கு வந்து அந்த காதலனை சரமாரியாக அடித்து மிக கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த அந்த காதலனை அங்கேயே போட்டு விட்டு, அந்த இளம் பெண்ணை மட்டும் தூக்கிக்கொண்டு அங்குள்ள புதருக்குள் சென்று, அந்த 6 பேரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அங்கு மயங்கிக் கிடந்த அந்த காதலனிடம், “இந்த பலாத்காரம் பற்றி வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவோம்” என்று, அவரை மிரட்டி விட்டுச் சென்று உள்ளனர்.

அவர்கள் 6 பேரும் சென்ற நிலையில், மெல்ல எழுந்து வந்த அந்த காதலன், தனது காதலியைத் தூக்கி தனது காரில் போட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று உள்ளார். மருத்துவமனையில் அந்த மாணவியை சேர்த்த அந்த காதலன், அந்த பெண்ணுக்கு நேர்ந்த கூட்டுப் பலாத்காரம் குறித்துக் கூறி அழுதுள்ளார். 

இதனையடுத்து, அந்த அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த பாலியல் பலாத்கார சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “மைசூரில் நடந்த இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி விசாரிக்க, மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்கும்” என்று, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் எஸ் பொம்மை கூறியுள்ளார்.