பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது - எல்.முருகன்

பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது - எல்.முருகன் - Daily news

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜகவுடன் கருத்து வேறுபாடு நீடிக்கும் சூழலில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார்.. 

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், "வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகளை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. அதே போல, புதிய கல்விக் கொள்கையின் தேவை குறித்து 50 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது. புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி, நான்கு மொழிக் கொள்கைகள் பின்பற்றப்படுகிறது “  என்றார். 

Leave a Comment