தமிழ்நாட்டில் நேற்று 5175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுனர். அண்மைக்காலமாகவே பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் தொற்று பாதிப்பு தமிழகம் மீளும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 59,156 பேருக்கு 61,166 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் இதுவரை 28,45,406 பேருக்கு 29,53,56 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் தான் மிக அதிகபட்சமாக 25 ஒரே நாளில் பலியாகியிருந்தனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 11811 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 90966 பேர் இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

ஆரோக்கியமான இந்த போக்கை போலவே, தமிழகத்தில் மரணமும் அதிகரிப்பது வழக்கமாகியுள்ளது. இதனாலேயே நோயாளிகள் மீதான கவனிப்பை அரசு அதிகரித்திருக்கிறது. நோயாளிகள் மீதான கவனிப்போடு சேர்த்து, இறப்பவர்கள் குடும்பத்துக்கும் அரசு சார்பில் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, செங்கல்பட்டு மருத்துவமனை டீன் சுகுமாரன் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா 25லட்சம் நிவாரணத்தொகை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சுமார் 28 பேர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்புபணியில் பல்லாயிரக்கணக்கானோர் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையினர், தூய்மை காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன் கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு நிவாரண தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா 25லட்சம் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 பேர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி , செங்கல்பட்டு மருத்துவமனை டீன் சுகுமாரன் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மேலும் இனி வரும் காலத்தில், முன் களப் பணியாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்களுக்கு, பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க தற்போது வரை முறையான தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தனித்திருத்தலும், பொது முடக்கமுமே தொற்றுப் பரவலை தடுக்கும் ஒரே மருந்தாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொற்றுப் பரவல் துவங்கியது முதல் தற்போது வரை மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட துறையினர் அயராத உழைப்பை நல்கி, இந்த வைரஸுக்கு எதிராகக் களமாடி வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களின் நிலைமை ஓரளவிற்கு பரவாயில்லை என்றாலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் மிகவும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.