கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

ramya

இந்நிலையில் VJ ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கையில் பந்தை வைத்து கொண்டு உடற்பயிற்சி செய்வது எப்படி என்பதை கற்றுத்தந்துள்ளார். ஜிம் செல்பவர்களுக்கு இந்த பயிற்சி நிச்சயம் கைகொடுக்கும் என்று பதிவு செய்துள்ளார். முதல் முறை செய்வார்கள் என்றால் குறைந்த பட்ச எடையை உபயோகப்படுத்துமாறு அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Ramya

கடைசியாக கையில் துடைப்பத்துடன் வாத்தி கமிங் பாடலுக்கு ரம்யா ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகியது. அதே போல் இந்த வீடியோவும் இணையத்தை ரவுண்டு அடிக்கும் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.