நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் பாவனா. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடல் மற்றும் கிரிக்கெட் கமென்ட்ரி போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால், இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் நடந்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார் பாவனா. 

bhavana

இந்நிலையில் பல திரை பிரபலங்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் அப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். க்ளாசிக்கல் நடனமான பரத நாட்டியம் கொண்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

bhavana

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் வெளிவராதா என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.