ஆயுத எழுத்து தொடரின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ !
By Aravind Selvam | Galatta | August 05, 2020 20:04 PM IST
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.இவர் ஹீரோயினாக நடித்து வரும் ஆயுத எழுத்து தொடரின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றன.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லாக்டவுனுக்கு பிறகு இந்த தொடரின் முதல் ப்ரோமோ வெளியாகி ட்ரெண்ட் அடித்தது.இதனை தொடர்ந்து இந்த தொடரின் முக்கிய வீடியோ ஒன்றை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.பல்பு மாட்டும்போது தவறிவிழப்போகும் இந்திராவை சக்தி தாங்கி பிடிக்கிறார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த ரொமான்டிக் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
ஓஹோ.. இப்படித்தான் சொதப்புமோ 😀😍
ஆயுத எழுத்து - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AayudhaEzhuthu #VijayTelevision pic.twitter.com/awAj3paOGi— Vijay Television (@vijaytelevision) August 5, 2020
This Kamal Haasan film to get a sequel? Official Clarification here!
05/08/2020 07:06 PM
Interesting new rule for Bigg Boss season 4 contestants
05/08/2020 07:05 PM
Nayanthara's blockbuster film to be remade - know who is going to play the lead?
05/08/2020 06:00 PM
SHOCKING: Khushbu receives rape threat - Khushbu releases proof of the man
05/08/2020 05:44 PM