ஹரிஷ் கல்யாணின் பாடல் படைத்த புதிய சாதனை !
By Aravind Selvam | Galatta | August 05, 2020 19:49 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.தொடர்ந்து இளைஞர்களை கவரும் வண்ணம் இவர் படங்கள் கொடுத்து வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு திரைப்படம் வெளியாகி விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் வெளியாகவுள்ளன.
கொரோனா காரணமாக தமிழ் திரையுலகம் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.இதனை எதிர்கொள்ள சில நடிகர்,நடிகைகள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் தங்கள் சம்பளத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த வரிசையில் ஹரிஷ் கல்யாணும் தனது படங்களில் சம்பளத்தை குறைத்து கொள்வதாக சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இவரது தாராள பிரபு படத்தின் சூப்பர்ஹிட் பாடலான அனிருத் இசையமைத்த டைட்டில் ட்ராக் பாடல் டிக்டாக்கில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறதுஇந்த பாடல் டிக்டாக்கில் 100 மில்லியன் பாரவையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.டிக்டாக் மட்டுமின்றி அனைத்து சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஹிட் அடித்திருந்தது.
இந்த பாடல் யூடியூப்பிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.தற்போது இந்த பாடலின் வீடியோ 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
This Kamal Haasan film to get a sequel? Official Clarification here!
05/08/2020 07:06 PM
Interesting new rule for Bigg Boss season 4 contestants
05/08/2020 07:05 PM
Nayanthara's blockbuster film to be remade - know who is going to play the lead?
05/08/2020 06:00 PM
SHOCKING: Khushbu receives rape threat - Khushbu releases proof of the man
05/08/2020 05:44 PM