இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் மாஸ்டர்,அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

புறம்போக்கு என்னும் பொதுவுடைமை படத்தை அடுத்து விஜய்சேதுபதி இயக்குனர் SP ஜனநாதனுடன் இணைந்திருக்கும் படம் லாபம்.ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துளளார்.தன்ஷிகா,ஜெகபதி பாபு,கலையரசன்,ப்ரித்வி பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

7சிஸ் எண்டெர்டைன்மெண்ட் மற்றும் விஜய்சேதுபதி ப்ரொடுக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் நடந்தன.

இந்த படம் குறித்த சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதனை அடுத்து விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த ட்ரைலருக்காக காத்திருக்கின்றனர்.