தமிழ் திரையுலகில் சீரான நடிகைகளுள் ஒருவர் வரலக்ஷ்மி. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். போடா போடி படத்தில் அறிமுகமானவர் இறுதியாக வெல்வெட் நகரம் எனும் படத்தில் நடித்திருந்தார். தற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

Varalaxmi Sarathkumar Danny Movie To Get Direct OTT Release Varalaxmi Sarathkumar Danny Movie To Get Direct OTT Release

இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. கடைசியாக யார் பார்த்தது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. 

Varalaxmi Sarathkumar Danny Movie To Get Direct OTT Release

தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால், டேனி திரைப்படம் நேரடியாக Zee5 தளத்தில் வெளியாகவுள்ளதாம். தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.