The Route பல பிரபலங்களின் வேலைகளை குறைத்து அவர்களுக்காக அயராது உழைக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.தென்னிந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இந்த நிறுவனம் இருந்து வருகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமின்றி திறமையுடன் உழைக்கும் பல இளம் கலைஞர்களையும் இந்த நிறுவனம் கவனித்து அவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.சமீபகாலமாக ரசிகர்களை மியூசிக் வீடியோக்கள் வெகுவாக ஈர்த்து வருவதால் மியூசிக் வீடியோ உருவாவதில் தங்கள் பங்கினை சிறப்பாக செய்து வருகின்றனர் The Route நிறுவனம்.

சோனி நிறுவனத்துடன் இவர்கள் கைகோர்த்து வெளியான முதல் மியூசிக் வீடியோ குட்டி பட்டாஸ் பெரிய வரவேற்பை பெற்றது,இந்த பாடல் 100 மில்லியன் ரசிகர்களை தாண்டி அமோக வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அஸ்கு மாறோ என்ற மியூசிக் வீடீயோவை வழங்கினர் இந்த பாடலும் பெரிய வரவேற்பை பெற்று 50 மில்லியனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் நாளை வெளியாகவுள்ள மியூசிக் ஆல்பம் வாடா ராசா.கென் மற்றும் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளனர்.சாண்டி நடனமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை வெங்கி இயக்கியுள்ளார்.இந்த பாடலில் கென் கருணாஸுடன் இணைந்து அவரது அம்மா கிரேஸ் நடித்துள்ளார்.இவர்களுடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரில் பிரபலமான நடிகை ப்ரீத்தி சர்மா நடித்துள்ளார்.

இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி அதீத வரவேற்பை பெற்றிருந்தது.நாளை வெளியாகும் இந்த பாடலை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.சோனியுடன் இணைந்து தங்களது ஹாட்ட்ரிக் வெற்றியை பெற The Route நிறுவனத்திற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Route (@therouteofficial)