தளபதி விஜயின் Beast ஷூட்டிங்கில் இணைந்த யோகிபாபு !
By Aravind Selvam | Galatta | August 11, 2021 13:29 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் தள்ளிப்போன இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து சில நாட்களுக்கு முன் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பல படங்களில் நடித்து வரும் யோகிபாபு ,Beast ஷூட்டிங்கில் இன்று இணைந்துள்ளார்.ட்விட்டரில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யோகிபாபு இதனை உறுதிசெய்துள்ளார்.AV 33 படப்பிடிப்பில் பங்கேற்று வந்த யோகிபாபு அதனை முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கில் அடுத்தநாளே இணைந்துள்ளார்.
Tomorrow
— Yogi Babu (@iYogiBabu) August 10, 2021
Prakash Raj's surgery turns successful - actor shares picture from hospital
11/08/2021 07:20 PM
Kamal Haasan's Vikram - Semma Mass Surprise Poster Released | Check Out
11/08/2021 06:52 PM