லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்தது. 

காப்பான் படத்தின் இசை வெளியிட்ட விழா சமீபத்தில் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திர ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர், வைரமுத்து மற்றும் பல பிரபலங்கள் சூர்யா பற்றியும் காப்பான் படம் பற்றியும் பேசி அசத்தினர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் மோகன் லால் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியானது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 20 என தெரியவந்தது.