தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இவர் நடித்த ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நடித்து இன்று வெளியாகியுள்ள ஜாக்பாட் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜோதிகா அடுத்ததாக கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும்,சூர்யா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கிவரும் பொன்மகள் வந்தால் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் ஜோதிகா ஹீரோயினாக நடிப்பார் என்றும் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.கத்துக்குட்டி படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.