அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ஒளியும் ஓலியும் வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.