சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று நாயகி.600 எபிசோடுகளை தாண்டி சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றானது நாயகி.விகடன் டெலிவிஸ்டாஸ் இந்த சீரியலை தயாரித்துள்ளனர்.திலீப் ராயன் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தார்.

முதலில் விஜயலக்ஷ்மி இந்த சீரியலின் நாயகியாக நடித்துவந்தார்.சில காரணங்களால் வித்யா பிரதீப் இந்த தொடரின் நாயகியாக பின்னர் வந்தார்.அம்பிகா,பாப்ரி கோஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.

சன் டிவியில் சில காரணங்களால் சில தொடர்கள் கைவிடப்பட்டது அதில் நாயகி தொடரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரின் இரண்டாம் சீசன் அடுத்ததாக ஒளிபரப்பப்பட்டது.இதில் ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா நடித்திருந்தார்.ஹீரோவாக தெய்வமகள் தொடரில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா நடித்தார்.முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீசனிலும் நடிக்கின்றனர்.

நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த தொடர் சில மாதத்திலேயே முடிக்கப்பட்டது.இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் பெரிய வருத்தத்தில் இருந்தனர்.தற்போது இந்த தொடர் மார்ச் 1 முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

A post shared by TAMILTVEXPRESS (@tamiltvexpresss)