ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மீகா.இந்த படத்திலேயே பல இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து கனவுக்கன்னியாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து இவர் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது..இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆத்மீகா அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருவார்.

தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்வது,ஒர்க்கவுட் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார் ஆத்மீகா.இவர் விஜய் ஆன்டனி ஜோடியாக கோடியில் ஒருவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்தது.

தற்போது ஆத்மீகா தனது புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.செம ஹாட்டான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வரும் இவரது இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)