தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் SK 16 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.நம்ம வீட்டு பிள்ளை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் Firstlook காலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது போஸ்ட்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.