தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். புஷ்கர் - காயத்ரி இயக்கிய பிளாக்பஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் மற்றும் மாதவன் நடிக்கும் மாறா போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா. 

கடந்த ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான பாத்திரத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அருள் நிதி நடித்த கே13 மற்றும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்-கல்லாக அமைந்தது. 

லாக்டவுன் காரணமாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இருக்கும் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை ரசிகர்களுடன் நடத்தி வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் புல்லட் பைக்கை ஓட்டி கீழே விழுந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கினார்.

கடந்த ஆண்டு விஸ்வாசம் படத்திற்குப் பிறகு தல அஜித் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. Hவினோத் இயக்கியிருந்த இந்த படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் மேற்கொண்ட பார்வை. வழக்கமாக மாஸ் ஹீரோ அந்தஸ்தில் இருப்பவர்கள் இது போன்ற படங்களில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் வயதான வழக்கறிஞர் கெட்டப்பில் நடித்து இருந்தார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் எட்டாம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது. இன்றுடன் ஒரு வருடம் நிறைவு அடைவதால் ரசிகர்கள் அது பற்றி பேசி வருகிறார்கள். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்கொண்ட பார்வை படம் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டரில் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இந்த சத்தம் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நன்றி. நேர்கொண்ட பார்வை ஒரு வருடம் நிறைவு அடைந்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படத்தில் வரும் ஒரு காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு அஜித் பற்றி அவர் பேசி இருக்கிறார். ஒரு மெகா ஸ்டார் அனைத்து தடைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். நாம் வெளிப்படையாக பேசாத விஷயங்கள் பற்றி இந்தப் படம் பேசுகிறது. தல அஜித்துடன் நடித்தது எனக்கு மிகப் பெரிய கௌரவம்" என கூறி இருக்கிறார்.