ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். 

sanjeev

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். தங்கள் ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றி பேசி வருகின்றனர்.

sanjeev

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி ஆல்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஆய்லாவிற்கு வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் வழங்கியவர்களுக்கு நன்றி. ஆய்லாவை உங்களிடம் காட்டுவதற்கு அதிக ஆவலாக காத்திருக்கிறோம். கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு உங்களுக்கு காட்டுகிறோம் என்றார்.