ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். 

dharalaprabhu

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

manobala manobalatweet

கொரோனா வைரஸ் பாதித்து ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. தற்போது இப்படத்தை பார்த்து விமர்சித்துள்ளார் இயக்குனர் மற்றும் நடிகரான மனோபாலா. டேஞ்சரான ஸ்கிரிப்ட்.. அருமையாக கையாளப்பட்டுள்ளது. விவேக் சார் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு அற்புதம் என பாராட்டியுள்ளார்.