சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாடோடிகள். இதன் வெற்றியை தொடர்ந்து நாடோடிகள் 2 சமீபத்தில் வெளியானது. இதில் சசிகுமாருடன், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் நடித்திருந்தார். நந்தகோபால் இந்த படத்தை தயாரித்தார். 

athulya sasikumar

U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த படத்திற்கு  ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டார். முதல் பாகம் போல் இதன் இரண்டாம் பாகம் அமையவில்லை. பெரிதளவில் ஏமாற்றமடைந்தனர் திரை விரும்பிகள். விமர்சன ரீதியாகவும் சேதமடைந்தது நாடோடிகள் 2. 

nadodigal2 sasikumar

தற்போது படத்திலிருந்து ரைலா ரைலா பாடல் வீடியோ வெளியானது. அச்சு ராஜாமணி பாடியிருந்த இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதினார். சசிகுமார் மற்றும் அதுல்யாவின் துள்ளலான ரொமான்ஸ் கொண்ட இந்த பாடல் இணையத்தை ஈர்த்து வருகிறது.