விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா, சரவணவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா கடந்த 2020 டிசம்பரில் தற்கொலை செய்துகொண்டார்.இது ரசிகர்கள் மற்றும் பிரபலன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.

சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.காவியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளதாக சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதுகுறித்து விசாரிக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் சமீபத்தில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரின் மஹாசங்கமத்திற்கு முன் விலகியதாகவும்,மஹாசங்கமத்தில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரையும் பாக்கியலட்சுமி தொடரின் இயக்குனர் இயக்கி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை விஜய் டிவி தரப்பில் அல்லது சீரியல் தரப்பில் இருந்து இது குறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srinivasan PA (@pa.srinivasan)

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srinivasan PA (@pa.srinivasan)