திரையுலகில் அனைவரும் விரும்பும் நடிகராக திகழ்பவர் நடிகர் ராணா டகுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தல அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி படத்தில் இவரது நடிப்பை கண்ட ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

Rana Daggubatis Roka Function Photos Gone Viral

சமீபத்தில் ராணா டகுபதி தனது காதலியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்தார். பிரபல தொழிலதிபரான மிஹீகா பஜாஜ் அவரது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் என்று குறிப்பிட்டு, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவியது. இன்று நடிகர் ராணா, Its Official என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியான சில நொடிகளிலேயே அந்த புகைப்படம் வைரலானது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Rana Daggubatis Roka Function Photos Gone Viral

இதனை பார்த்த பலரும் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நினைத்தனர். அப்படியிருக்க நடிகர் நானி அவரிடம் நிச்சயம் முடிந்து விட்டதா என்று கேட்க, இது திருமணத்திற்கு முன்பாக இரு குடும்பமும் சேர்ந்து அன்பை பரிமாறிக்கொள்ளும் ரோகா நிகழ்ச்சி, நிச்சயதார்த்தம் இல்லையென்றும் ராணா தெளிவு படுத்தினார்.