தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி.வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.700 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.

இந்த தொடரில் புவி அரசன் மற்றும் அஸ்வினி முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர்.ஸ்வாதி,அழகப்பன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.கொரோனா பாதிப்புக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த தொடரின் ஷூட்டிங்கும்,சன் டிவியின் சித்தி 2 நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்துள்ளது.இந்த ஷூட்டிங்கில் ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அஸ்வினி பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.ஒரே சேனலில் இருக்கும் இரண்டு தொடர்கள் இணைவது போல இந்த இரண்டு சீரியல்களும் சேர்ந்து மஹாசங்கமம் வந்தால் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

A post shared by Ashwini Radha Krishna 💫 (@ashu.radhakrishna)