பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்திய சினிமா ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கடந்த சில மாதங்களாக மனஅழுத்ததில் இருந்த 34 வயதான தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MS Dhoni Sequel Will Not Happen Without Sushant Singh Rajput

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறினார் சுஷாந்த்.அந்த படத்தில் தோனியை போல் ஒவ்வொரு சீனிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார் சுஷாந்த்.இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் தோனியின் நண்பருமான அருண் பாண்டே சுஷாந்த் உடனான அனுபவங்கள் குறித்து PTIக்கு தெரிவித்தார்.

MS Dhoni Sequel Will Not Happen Without Sushant Singh Rajput

அவர் கூறியதாவது , படம் வெளியாகும் முன் இது நன்றாக இருக்குமா இல்லையா தன்னால் தோனியை ஸ்க்ரீனில் கொண்டுவரமுடியுமா என்று சுஷாந்த் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்.அடிக்கடி தோனியை போல் செய்யாவிட்டால் அவரது ரசிகர்கள் என்னை சும்மாவிட மாட்டார்கள் என்றும் அவரை தெரிவித்தார்,ஆனால் சுஷாந்த் மீதும் அவர் படத்திற்காக போட்ட உழைப்பின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது.அதை போலவே படமும் பெரிய வெற்றியடைந்தது.

MS Dhoni Sequel Will Not Happen Without Sushant Singh Rajput

சுஷாந்த் இறந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அருண் பாண்டே இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை அதிலும் சுஷாந்த் நம்மோடு இல்லாமல் நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அவர் தெரிவித்தார். 

MS Dhoni Sequel Will Not Happen Without Sushant Singh Rajput