மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படம், பின்னர் ஹிந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்தார். அதன்பின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மாளவிகா.

Malavika Mohanan Look Alike Spotted On Tik Tok

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் மாளவிகா மோஹனன் போல் இருக்கும் டிக்டாக் நடிகை இணையத்தில் வைரலாகி வருகிறார். சோஷியல் மீடியா ட்ரெண்டில் ஹீரோ அல்லது ஹீரோயின் போல் உள்ளவர்களை கண்டுபிடித்து கொண்டாடி வருகின்றனர் இணையவாசிகள். 

Malavika Mohanan Look Alike Spotted On Tik Tok

ஏற்கனவே நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் போல் உள்ள நடிகைகளின் டிக்டாக் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதுபோன்ற கலைஞர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

@egavalliegavalli

##egavalli ##attitudequeen ##lusuponnu ##madlove

♬ original sound - Shadow Boy🌸